Thursday 5 June 2014

சுயநினைவோடு இருக்கிறோம்.இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஒருவேளை நாம் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து போனால் இதே பக்தியோடு இறைவனை வணங்குவோமா?

சுயநினைவோடு இருக்கிறோம்.இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஒருவேளை நாம் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து போனால் இதே பக்தியோடு இறைவனை வணங்குவோமா?

அப்பைய தீட்சிதருக்கு இந்த கேள்வி மனதை குடைந்தது.இதற்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்றால் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தார்.சீடர்களை அழைத்தார்.அவர்களிடம் சில எழுதப்படாத ஓலைச் சுவடிகளை கொடுத்து விட்டு சொன்னார் "இப்போது இந்த ஊமத்தை விதைகளை நான் உண்ணப் போகிறேன்.இது என் இரத்தத்தில் கலந்து சித்தத்தை மயக்க போகிறது.புத்தி பேதலித்து எனக்கு சித்தபிரமை பிடித்த நேரத்தில் நான் என்ன உளறுகிறேன் என்பதை நீங்கள் இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி வையுங்கள்.நான் உளறி முடித்த பின் இந்த மாற்று மருந்தை கொடுத்து மயக்கத்தை தெளிய செய்யுங்கள்" என்றார்.

சீடர்களுக்கு வியப்பு மேலிட்டாலும் குருவின் உத்தரவை ஏற்றனர்.அப்பைய தீட்சிதர் மனமுருகி சிவபெருமான் திருவடிகளை சிந்தித்து வணங்கி கையில் இருந்த ஊமத்தை விதைகளை மென்று உட்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவரது செயல்பாடுகள் வித்தியாசத்தை காட்டின.பிறகு சீரான குரலில் ஓங்கி ஒலிக்க தொடங்கின ஐம்பது ஸ்தோத்திரங்கள்.அத்தனையும் வேதத்தின் சாரங்கள்.பாடல்களை சொல்லி முடித்து மயங்கியவருக்கு சீடர்கள் மாற்று மருந்தை கொடுத்தனர்.இன்றும் "ஆத்மார்ப்பண ஸ்துதி" என்ற பெயரில் அப்பாடல்கள் போற்றப்படுகின்றன.

"கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம் யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ | பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ".

கருத்துரை :-

இந்த விசித்திரமான பிரபஞ்சத்தைப் படைத்தவரும் தேவர்களுக்குள் முதல்வனுமான உன் அபாரமான மஹிமைகளை யாரால் தான் அறிய முடியும்? ஆயினும் பக்தர்களுக்கு அந்த ஈசுவரனும் சுலபர் ஆகிவிடுகிறபடியால் பக்தியையே முன்னிட்டு நான் உம்மை ஸ்துதி செய்யப் போகிறேன். என் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும் படி என்னைத் தூண்டுகிறது.

தமிழர் விஞ்ஞானம் அறிவோம்.

தமிழர் விஞ்ஞானம் அறிவோம்.

தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்/ஓசோன் (stratosphere/ozone)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness) - நீத்தம்

என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான் (1/17). ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி (4/5) இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா - 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா - 365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு

பாண்டிய மன்னனின் சந்தேகம் தீர்ந்தது எப்படி? ஏழை புலவன் தருமி மூலம் சிவபெருமான் கொடுத்தனுப்பிய ஓலையில் உள்ள பாடல் வாயிலாக, அந்த பாடல்,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

பாடலின் பொருள்:-

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

இதற்கு விஞ்ஞான ஆதாரம்,

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

உயிரெழுத்தான "அ" தொடங்கி ஃ வரையிலான பன்னிரண்டு எழுத்துக்களுக்கும், மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுக்கும் பாடியுள்ளார்.இது மிகவும் அற்புதமான பாடல்.நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

 இதில் உயிரெழுத்தான "அ" தொடங்கி ஃ வரையிலான பன்னிரண்டு எழுத்துக்களுக்கும், மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுக்கும் பாடியுள்ளார்.இது மிகவும் அற்புதமான பாடல்.நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.


-திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.


*****

தமிழில் "ங" என்ற எழுத்தின் இனத்தை சேர்ந்த பன்னிரண்டு எழுத்துக்களும் பலவாறாக பயன்படுத்த பட்டாலும் சொல்லின் முதலாக வருவதில்லை.

அப்படி சொல்லின் முதலாகவும் பாடலின் தொடக்கமாகவும் அமைந்த இரண்டே பாடல்கள்.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

-திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.

இதில் "ங" என்கிற எழுத்தின் வடிவம் நந்தியை போல காட்சியளிப்பதை காணலாம்.நந்தி கொடியை (ரிஷப கொடி) அப்பர் சுவாமிகள் இவ்வாறு உணர்த்துகிறார்.

மற்றொரு பாடல் ஔவையின் ஆத்திச்சூடி
"ஙப் போல்வளை"


****
இதில் மற்றுமொரு செய்தி.இந்த பாடல் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய சித்ததொகை என்னும் குறுந்தொகை பாடலில் வருகிறது.


*****
தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் 103 எழுத்துக்களில் தான் தமிழ் வார்த்தை ஆரம்பிக்க முடியும் என்பது நன்னூல் விதி.
******
  
வேதங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும்

மகா சங்கார காலத்தில் பிரளயம் தோன்றி இந்த உலகம் அழிவை சந்திக்கும் போது முதலில் கடலுக்கு அடியில் உள்ள "வடவாக்கினி" அல்லது "வடமுகாக்கினி" என்ற தீப்பிழம்பு தான் முதலில் உலகை அழிக்க காரணமாகிறது என வேதங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும் கூறுகின்றன.

இந்த வகை அக்கினி குதிரை முகத்துடன் கடலுக்கு அடியில் தலை குனிந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இது தலையை நிமிர்த்தும் போது அழிவு தொடங்கும் என இந்நூல்கள் கூறுகின்றன.

நவீன விஞ்ஞானம் கடலுக்கு அடியில் மிகப்பெரிய அக்கினி மலை இருப்பதாகவும், அதுவே அவ்வப்போது கடலுக்கு அடியில் எரிமலை சீற்றங்களாகவும் வெளிப்படுகின்றன என்பதை ஒத்துக் கொள்கிறது.இந்த எரிமலை சீற்றங்களின் தொடர் விளைவே சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை.

திருநாவுக்கரசு சுவாமிகளை இறைவன் சூலை நோய் தந்து ஆட்கொண்ட போது அந்த வலியின் கொடுமையை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான் அது வடவாக்கினியை போன்று இருந்ததாக குறிப்பிடுகிறார்.


------------------------------------------xxxxxxxxxxxxxxxxxx----------------------------------------------