Thursday 5 June 2014

சுயநினைவோடு இருக்கிறோம்.இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஒருவேளை நாம் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து போனால் இதே பக்தியோடு இறைவனை வணங்குவோமா?

சுயநினைவோடு இருக்கிறோம்.இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஒருவேளை நாம் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து போனால் இதே பக்தியோடு இறைவனை வணங்குவோமா?

அப்பைய தீட்சிதருக்கு இந்த கேள்வி மனதை குடைந்தது.இதற்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்றால் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தார்.சீடர்களை அழைத்தார்.அவர்களிடம் சில எழுதப்படாத ஓலைச் சுவடிகளை கொடுத்து விட்டு சொன்னார் "இப்போது இந்த ஊமத்தை விதைகளை நான் உண்ணப் போகிறேன்.இது என் இரத்தத்தில் கலந்து சித்தத்தை மயக்க போகிறது.புத்தி பேதலித்து எனக்கு சித்தபிரமை பிடித்த நேரத்தில் நான் என்ன உளறுகிறேன் என்பதை நீங்கள் இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி வையுங்கள்.நான் உளறி முடித்த பின் இந்த மாற்று மருந்தை கொடுத்து மயக்கத்தை தெளிய செய்யுங்கள்" என்றார்.

சீடர்களுக்கு வியப்பு மேலிட்டாலும் குருவின் உத்தரவை ஏற்றனர்.அப்பைய தீட்சிதர் மனமுருகி சிவபெருமான் திருவடிகளை சிந்தித்து வணங்கி கையில் இருந்த ஊமத்தை விதைகளை மென்று உட்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவரது செயல்பாடுகள் வித்தியாசத்தை காட்டின.பிறகு சீரான குரலில் ஓங்கி ஒலிக்க தொடங்கின ஐம்பது ஸ்தோத்திரங்கள்.அத்தனையும் வேதத்தின் சாரங்கள்.பாடல்களை சொல்லி முடித்து மயங்கியவருக்கு சீடர்கள் மாற்று மருந்தை கொடுத்தனர்.இன்றும் "ஆத்மார்ப்பண ஸ்துதி" என்ற பெயரில் அப்பாடல்கள் போற்றப்படுகின்றன.

"கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம் யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ | பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ".

கருத்துரை :-

இந்த விசித்திரமான பிரபஞ்சத்தைப் படைத்தவரும் தேவர்களுக்குள் முதல்வனுமான உன் அபாரமான மஹிமைகளை யாரால் தான் அறிய முடியும்? ஆயினும் பக்தர்களுக்கு அந்த ஈசுவரனும் சுலபர் ஆகிவிடுகிறபடியால் பக்தியையே முன்னிட்டு நான் உம்மை ஸ்துதி செய்யப் போகிறேன். என் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும் படி என்னைத் தூண்டுகிறது.

No comments:

Post a Comment